×

அமெரிக்காவில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் ஷாருக்கான்

மும்பை: ஷாருக்கான் கூறியிருப்பதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் எங்களுக்கும், எம்.எல்.சி.க்கும் (அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்) இடையே ஒப்பந்தமாகி உள்ளது. உலகின் மிகச்சிறந்த பெருநகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்சிலும், அமெரிக்க கிரிக்கெட்டிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவில் எம்எல்சியில் எங்களது முதலீடு, அமெரிக்க கிரிக்கெட்டின் அற்புதமான எதிர்காலம் குறித்த எங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. டி20 கிரிக்கெட்டை உலகளவில் பிரபலமடைய வைக்கும் முயற்சி இது. இவ்வாறு ஷாருக்கான் கூறினார். இந்த ஸ்டேடியம் 15 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் இருக்கைகளுடன் கட்டப்படும்.

Tags : Shah Rukh Khan ,United States , Shah Rukh Khan builds a cricket stadium in the United States
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்