×

சின்னாளபட்டி, கன்னிவாடியில் ஹைபிரிட் தக்காளி விளைச்சல் அமோகம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி, கன்னிவாடியில் ஹைபிரிட் ரக தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது.சின்னாளபட்டியை சுற்றியுள்ள நடுப்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, செம்பட்டி, கலிக்கம்பட்டி, பஞ்சம்பட்டி ஆகிய ஊர்களிலும், கன்னிவாடியை சுற்றியுள்ள புதுப்பட்டி, மாங்கரை, அம்மாபட்டி, தர்மத்துப்பட்டி, பண்ணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் ஒட்டு ரகம் என அழைக்கப்படும் ஹைபிரிட் ரக தக்காளியை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். அவை தற்போது நன்கு விளைந்திருப்பதால் அவற்றை தினசரி பறித்து வெளிமாவட்டங்களுக்கும், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கும் அனுப்பி வைக்கின்றனர். ஆப்பிள் போல் அதிக நிறத்துடன் இருக்கும் இந்த ஹைபிரிட் ரக தக்காளியை ஹோட்டல்கள் மற்றும் சைனீஸ் உணவகங்களில் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து டி.புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து சிவம் என்ற ஒட்டுரக தக்காளி விதையை வாங்கி வந்து பயிரிட்டோம். தற்போது அவை நன்கு விளைந்து அதிகளவில் காய்கள் பிடித்துள்ளன. பழுக்கும் பருவத்தில் உள்ள காய்களை பறித்து மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கிறோம். குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை இந்த ரக தக்காளிகள் தாக்கு பிடிக்கும் என்பதால் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்’ என்றார்.

Tags : Kodaikanal: Ayakkudi mangoes attract tourists: sprouting shops along the road
× RELATED விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்!!