×

கோவையில் நூதன மோசடி பைக்கில் லிப்ட் தந்தவரை மிரட்டி போன் பே மூலம் ₹72,000 அபகரிப்பு

கோவை : கோவை கணபதி மணியக்காரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ஷ்யாம்குமார் (25), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பரை சந்திப்பதற்காக பைக்கில் சென்று ெகாண்டிருந்தார். எப்.சி.ஐ ரோட்டில் சென்றபோது, ஒரு நபர் ஷ்யாம்குமார் பைக்கை மறித்து லிப்ட் கேட்டார்.

இரக்கப்பட்டு அவரை பைக்கில் ஏற்றி கொண்டு தண்ணீர்பந்தல் ரோடு லட்சுமி நகரில் இறக்கி விட்டார். அப்போது அங்கு ஏற்கனவே, காத்திருந்த ஒரு வாலிபரும், லிப்ட் கேட்டு வந்த நபரும் சேர்ந்து ஷ்யாம்குமாரை மிரட்டி அவரது செல்போன் மற்றும் பைக்கை பறித்தனர்.

 பின்னர், அவரின் செல்போன் பாஸ்வேர்ட் மற்றும் போன் பே ரகசிய எண்ணை மிரட்டி பெற்றனர். பின்னர் லிப்ட் கேட்டு வந்த நபர், ஷ்யாம் குமாரை பிடித்து வைத்துக்கொள்ள, இன்னொரு நபர், செல்போன் மற்றும் பைக்குடன் அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து செல்போன் மற்றும் பைக்கை தந்துவிட்டு சென்றனர்.

ஷ்யாம் குமார் செல்போனில் பார்த்த போது போன் பே மூலம் ரூ.72 ஆயிரத்துக்கு பீளமேடு பகுதியில் நகைகடையில் நகை வாங்கியதாக தெரியவந்தது. இது தொடர்பாக பீளமேடு போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். நூதன மோசடி நபர்களுக்கு சுமார் 30 வயது இருக்கலாம் என தெரிகிறது. இவர்களின் முகம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Coimbatore , Kovai, Seized, Money
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை