கொரோனாவால் பெய்ஜிங் நகரவாசிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு : 60 ரயில் நிலையங்கள் மூடல்; 158 பேருந்து வழித்தடங்களும் ரத்து!!

பெய்ஜிங் : சீனாவின் ஷாங்காயை அடுத்து தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் பெருமளவு ரயில் மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவில் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. பெய்ஜிங்கில் ஒரே நாளில் புதிதாக 53 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பெய்ஜிங்கில் பொது போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. 60 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 158 பேருந்து வழித்தடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தொற்று அதிகம் உள்ள Chaoyang மாவட்டத்திற்கு ரயில், பேருந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக பெய்ஜிங்கில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதோடு ஹோட்டல்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: