சென்னை: மதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக 5 பேரை நியமனம் செய்து பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை: ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக இருந்த பட்டுத்துறை மாரிச்சாமி, சி.எஸ்.சிமியோன்ராஜ் அப்ெபாறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக இளவழகன், வழக்கறிஞர் கே.வி.மோகனசுந்தரம், கோவை பெ.செல்வராஜ், மதுரை எஸ்.மகபூப்ஜான், வழக்கறிஞர் செந்தில்செல்வன் ஆகிய 5 பேர் மட்டுமே செயல்படுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
