×

கலசபாக்கம் அருகே 4,560 அடி பர்வதமலைக்கு கொண்டு செல்லப்பட்ட உண்டியல்கள்

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே பிரசித்தி பெற்ற பர்வதமலையில் உண்டியல்கள் கொண்டு செல்லப்பட்டது. கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற பர்வதமலை உள்ளது. இங்கு 4,560 அடி உயரத்தில் மல்லிகார்ஜுனேஸ்வரர் பாலாம்பிகை அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர்.

மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவர். இதையடுத்து கோயிலில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், உண்டியலில் தொடர் திருட்டுக்கள் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க இந்து சமய அறநிலைத்துறை மூலம் திண்டுக்கல்லில் இருந்து 170 கிலோ எடை உள்ள பாதுகாப்பு வசதியுடன் கூடிய 3 உண்டியல்கள் கோயிலின் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 3 உண்டியல்கள் டோலி கட்டி மலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.


Tags : Parthamalayle ,Kalasabakkam , Kalasapakkam,Parvathamalai, Hyundiyal
× RELATED பர்வதமலை ஏறிய சென்னை பக்தர்கள் 2 பேர் பலி