கரூர் மகாத்மாகாந்தி சாலையில் வடிகால் பள்ளத்தில் பழைய கான்கிரீட் கம்பிகளால் அபாயம்: அகற்ற கோரிக்கை

கரூர்: கரூர் மகாத்மா காந்தி சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் கான்கிரீட் கம்பிகள் அகற்றப்படாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், மகாத்மா காந்தி சாலை, திருச்சி சாலையுடன் இணையும் இடத்திலும் சாலையோரம் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் கான்கிரீட் கம்பிகள் அகற்றப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் இந்த பகுதியின் வழியாக கடந்து செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். கம்பிகள் வெளியே தெரியும் வகையில் இந்த வடிகால் பள்ளம் உள்ளதால் அடிக்கடி சிறு விபத்துக்களும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, ஆபத்தான நிலையில் உள்ள கான்கிரீட் கம்பிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: