×

ஜெயங்கொண்டம் அருகே வழிதவறி வயலுக்குள் வந்த மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன், (65).என்பவர் நேற்று தனது வயலில் இருக்கும் போது, அருகிலுள்ள காட்டில் இருந்து வழிதவறி மான்குட்டி தனது வயலுக்குள் வந்து விட்டது. இதையடுத்து அதனை பிடித்து பாதுகாப்பாக தனது வீட்டில் வைத்துள்ளார். இது குறித்து நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மான்குட்டியை மீட்க, அரியலூர் வனசரக வனத்துறை அதிகாரி சக்திவேல் என்பவருக்கு பிராஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்க பட்டு வனத்துறை அதிகாரியிடம் மான் குட்டியை பாதுகாப்பாக ஒப்படைக்க பட்டது.

Tags : Jayankondam , Handing over to the deer forest department which came into the roadside field near Jayankondam
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...