×

2 ஆண்டுகளுக்குப் பிறகு பரவசம் சர்தாம் யாத்திரை நாளை தொடக்கம்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி புனித தலங்களுக்கு ஆண்டுதோறும், ‘சர்தாம் யாத்திரை’ நடத்தப்படுகிறது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல், இயற்கை பேரழிவு போன்ற காரணங்களால் இந்த யாத்திரையில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான யாத்திரை நாளை முதல் தொடங்கி, 45 நாட்களுக்கு நடக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடு, கொரோனா முன்னெச்சரிக்கை போன்ற காரணங்களால், இந்த  யாத்திரைக்கு தினமும் குறிப்பிட்ட  எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தாண்டு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே யாத்திரையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில், பங்கேற்க பக்தர்கள் இடையே ஆர்வம் அதிகமாகி இருக்கிறது.

Tags : Ecstasy, Sardam Pilgrimage, Beginning
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...