×

எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகத்துக்கு போலீஸ் உடையில் வந்த குட்டி ஐபிஎஸ் தருண்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்க பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் வருவதுண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவர்கள் அருங்காட்சியகத்துக்கு வந்திருந்தனர். அப்போது 1 ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் போலீஸ் உடையில் அங்கு வந்திருந்தது பார்வையாளர்களை ஈர்த்தது. அந்த குட்டி சிறுவனுடன் பெற்றோரும் வந்திருந்தனர்.

அப்போது பேசிய சிறுவனின் பெற்றோர்: அருங்காட்சியகத்தில் 1948ம் ஆண்டு முதல் ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியல் உள்ளது. வருகிற 2033ம் ஆண்டு இந்த பட்டியலில் தருண் என்ற பெயரும் இடம் பெறும் எனநெகிழ்ச்சியாக கூறினர். இதனையடுத்து அங்கு  உள்ள போலீசார் உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு: என் பெயர் தருண் ஐபிஎஸ் என கம்பீரமாக கூறியது காண்போரை ஈர்த்தது.

Tags : Kutty IPS Tarun ,Egmore Police Museum , Museo de la policía de Egmore, estilo policial, Kutty IPS Tarun
× RELATED எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தில்...