தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் பலி: ஒரு நபர் குழு விசாரணை துவக்கம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27 ம் தேதி அதிகாலை தேர் வீதி உலாவின் போது எதிர்பாராவிதமாக உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து, சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் பலியாகினர்.

விபத்து குறித்து வருவாய்த் துறை செயலாளர் ஜெயந்த்குமார் தலைமையில் ஒரு நபர் குழு விசாரணை செய்து அறிக்கை அளிக்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி ஜெயந்த்குமார் தலைமையிலான விசாரணை குழு இன்று காலை தஞ்சை களிமேடு கிராமத்திற்கு சென்று விசாரணையை துவக்கியது.

Related Stories: