×

கோடநாடு எஸ்டேட்டில் என்னென்ன பொருட்கள் இருந்தன?: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக துருவிதுருவி விசாரணை..!!

கோவை: கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. தனிப்படை போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்.

போயஸ் கார்டன், கொடநாடு என்று ஜெயலலிதா எங்கு சென்றாலும், அவரின் நிழல்போல உடன் பயணித்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் அவருக்குத் தெரியும். கோடநாடு எஸ்டேட்டில் என்னென்ன மாதிரியான பொருள்கள் இருந்தன, ஜெயலலிதா அறையில் என்னென்ன விஷயங்கள் இருந்தன, எந்த மாதிரியான ஆவணங்கள் இருந்தன  என்று பூங்குன்றனிடம் விசாரித்துவருகின்றனர். நேற்று 6 மணி நேரத்துக்கு மேலாக பூங்குன்றனிடம் விசாரணை நடந்த நிலையில் கோடநாடு விவகாரம் பற்றி துருவிதுருவி கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.


Tags : Kodanadu , Kodanad Estate, Jayalalithaa Assistant Bloom
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...