எம்ஆர்பி தேர்வு மூலம் பணி நியமனம் செய்த 8000 செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வலியுறுத்தல்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் சின்னத்துரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது: 2015ம் ஆண்டு எம்ஆர்பி தேர்வின் மூலம் ஒப்பந்தம் முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 8000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து பணிவரன்முறை செய்ய வேண்டும். மேலும் செவிலியர்களுக்கான தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும். கொரோனா காலத்தில் தங்களின் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றிய 800 ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: