×

விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பம்

* ஒரு பதவிக்கு 296 பேர் போட்டி
* டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஒரு பதவிக்கு 296 பேர் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் விஏஓ 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள், வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர்
அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் என ெமாத்தம் 7,301 இடங்கள் போட்டி தேர்வுகள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டா அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கு கடந்த மாதம் 30ம் தேதி முதல் விண்ணப்பித்தல் தொடங்கியது. சுமார் 30 நாட்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

 இந்த காலஅவகாசம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இதில் லட்சக்கணக்கோர் விண்ணப்பித்துள்ளனர். இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 பதவியில் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு நடந்த குரூப் 4 தேர்வுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்தது இல்லை. ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு அதிகபட்சமாக 20.76 லட்சம் பேர் தான் விண்ணப்பித்திருந்தனர். இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. கடைசி நாளுக்கு முந்தைய 4 நாட்களில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இறுதி நாளான்றும் நேற்று முன்தினம் விண்ணப்பிக்க அதிகமானோர் ஆர்வம் காட்டினார். இதனால் நேற்று முன்தினம் 12 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டதால் இரவிலும் நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்டிருந்த காலகெடு முடிந்துள்ளது. இத்தேர்வுக்கு 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்கள் 9,26,583 பேர், பெண்கள் 12,58,616 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 129 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதைத்தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும். இந்த தேர்வுகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்
டிஎன்பிஎஸ்சிக்கு ேதர்வுக்கு இதுவரை கடந்த 2012ம் ஆண்டு 12,33,731 பேர், 2013ம் ஆண்டு 14,05,137 பேர், 2014ம் ஆண்டு 12,72,862 பேர், 2016ம் ஆண்டு 15,79,747 பேர், 2017ம் ஆண்டு 20,76,200 பேர், 2019ம் ஆண்டு 16,31,648 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிக பட்சமாக 2017ம் ஆண்டு 20,76,200 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்தாண்டு அதையும் விட அதிகபட்சமாக 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags : Having completed the application deadline For Group 4 examination 21.85 lakh people applied
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...