×

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் விஷம் குடித்த மாணவி: மாணவன் அதிரடி கைது

சின்னசேலம்: சின்னசேலம் அருகே ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் பிளஸ் 2 மாணவி விஷம் குடித்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஐடிஐ மாணவனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஐடிஐ படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆறு மாதமாக அந்த மாணவி மாணவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது.
இதனால் அந்த மாணவன் இவர்கள் ஒன்றாக பழகியபோது வீடியோ காலில் ஆபாசமாக பேசியதை ஸ்கிரீன் ரெக்கார்டரில் சேமித்து வைத்து, தற்போது வாட்ஸ் அப்பில் பரவ விட்டதாக தெரிகிறது.

இதையறிந்த அந்த மாணவி அவமானம் தாங்காமல் நேற்று முன்தினம் இரவு விஷ மருந்து குடித்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Poisoned student arrested for threatening to take pornographic picture: Student arrested
× RELATED சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்த பஞ்.,...