×

முதல்வரை அதிகாலை 3 மணிக்கும் அதிகாரிகள் தொடர்பு கொள்ளலாம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு தேர் விபத்து தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அப்போது அவர், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் தொடர்பில் இருந்தார். அதிகாலை 3 மணி ஆனாலும் தொடர்பு கொள்வதற்கான சுதந்திரத்தை, அதிகாரிகளுக்கு முதல்வர் வழங்கியுள்ளார். சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்துவிட்டு நிவாரணத்தை அறிவித்துவிட்டு சம்பவ இடத்திற்கு வருவதாக முதல்வர் தெரிவித்தார். 100 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தேர் விழாவில், தேர் விபத்து நடந்த ஊரில் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்தவர். ஒன்றிய கவுன்சிலர் பாஜவை சேர்ந்தவர் என்றாலும் இந்த நிகழ்வில் அரசியல் பார்க்காமல் இணைந்து செயல்பட்டனர். முதல்வர் பேரவையில் கூறுவது போல நமது அரசு களத்தில் பிரதிபலித்தது. அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


Tags : Minister ,Mahesh Poyamozhi , Officials can be contacted first at 3 am: Minister Mahesh Poyamozhi
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி