அசாம் மாநிலம் திப்ருகரில் 7 அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு: பிரதமர் மோடி, ரத்தன் டாடா ஆகியோர் பங்கேற்பு

அசாம்: அசாம் மாநிலம் திப்ருகரில் 7 அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தை பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் திறந்து வைத்தனர். புதிதாக 7 புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் நடைபெறும் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அந்த நிகழ்ச்சியின் போது கல்வித்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 500 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவக் கல்லூரி, பட்டக்கல்லூரி, மற்றும் விவசாயக் கல்லூரி ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இன்று பிற்பகல் பிற்பகல் திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரிக்கு சென்ற பிரதமர், திப்ருகர் புற்றுநோய் மருத்துவமனையை பார்வையிட்டு கல்வெட்டை திறந்து வைத்தார். அதன்பின்னர் திப்ருகர் கானிக்கர் திடலில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடாவுடன் இணைந்து 7 புற்றுநோய் மருத்துவமனைகளை திறந்து வைத்தனர்.

Related Stories: