×

ஈரோடு அருகே விதிகளை மீறி வெளியேற்றப்படும் சாய கழிவுகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு அருகே விதிகளை மீறி வெளியேற்றப்படும் சாய கழிவுகள் மற்றும் தோல் ஆலைகளின் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசு அடைவதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு மற்றும் புறநகர் பகுதிகளில் 500-க்கும் மேற்ப்பட்ட சாயப்பட்டறைகள், மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் சில ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள சுண்ணாம்பு ஓடையில் வெளியேற்றுவதற்காக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசாயனம் கலந்த கழிவுநீர் பொங்கும் நுரையுடன், ஆற்றில் கலப்பதால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு சுகாதார சீர்கேடுகளும் வரக்கூடும் என பொதுமக்கள் குற்றம்சாட்டிருக்கின்றனர்.

சுண்ணாம்பு ஓடையில் விடப்படும் சாயக்கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சட்ட விரோதமாக சாயக்கழிவுகளை ஆற்றில் விடும் தொழிற்சாலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Dye ,Erode , Dye Waste, District Administration, Action, Public, Cauvery
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு