×

பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் தயாரித்து விற்ற கடைக்காரர்கள் 2 பேர் கைது

சென்னை: பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் தயாரித்து விற்ற 2 கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க நம்பர் பிளேட்டை மறைத்து பைக் ஓட்டி வந்த 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அண்ணாசாலை சென்னை பைக்கர்ஸ், ஆலந்தூர் நியூமெகா ஸ்டிக்கர்ஸ் கடை உரிமையாளர்கள் சிக்கினர். பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் நம்பர் பிளேட்டை மறைத்து வாகனத்தை இயக்கியது தெரியவந்த நிலையில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது சென்னையில் வாடிக்கையாகி வருகிறது இதனை கட்டுப்படுத்த சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனடிப்படையில் இரவு நேரங்களில் போலீசார் பைக் சாகசங்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மெரினா கடற்கரை சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இளைஞர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 நபர்களை கைது செய்தனர்.


Tags : Bike race, adventure, sliding number plate, 2 people, arrested
× RELATED ஆந்திராவில் சட்டமன்ற, நாடாளுமன்ற...