×

கோகா கோலா நிறுவனத்தை வாங்க போகிறேன்.. என்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் : எலான் மஸ்க்

வாஷிங்டன் : ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து கோகா கோலா நிறுவனத்தை வாங்குவதாக உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லாவின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை ரூ.3.3 லட்சம் கோடி தந்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், மஸ்க் வாங்கிய பிறகு டிவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார்? என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. தற்போது, டிவிட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் வழிநடத்தி வருகிறார்.  

இந்த நிலையில் ட்விட்டரில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை மகிழ்ச்சியாகவே அதிகம் பயன்படுத்துவோம்.ட்விட்டரை அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்க போகிறேன். கோகோயினை மீண்டும் கோகோ கோலா உடன் சேர்க்க உள்ளேன், என்றார். மேலும் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை மகிழ்ச்சிக்காகவே அதிகம் பயன்படுத்துவோம் என்று கோகோ கோலா, மெக் டொனால்ட்ஸ் நிறுவனங்களை வாங்க போவதாக தாம் கூறியது நகைச்சுவை என்பது போல் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து, என்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க அரசியல் ரீதியாக ட்விட்டர் நடுநிலையாக இருக்க வேண்டும். நடுநிலையாக இருந்தால் தீவிர வலது சாரியோ, தீவிர இடதுசாரியோ கோபம் தான் அடைவார்கள். ட்விட்டர் டிஎம்களில் சிக்னல் போன்ற என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன் இருக்கும்,எனவே உங்கள் செய்திகளை யாரும் உளவு பார்க்கவோ அல்லது ஹேக் செய்யவோ முடியாது”,என்று தெரிவித்துள்ளார்.

Tags : Coca ,Elon Musk , Coca Cola, Elon Musk, Twitter
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்