×

வீட்டின் கட்டுமனான பணிக்காக குழி தோண்டும் போது கிடைத்த தங்க புதையல்: புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில்  வீட்டின் கட்டுமனான பணிக்காக குழி தோண்டும் பொது தங்க புதையல் கிடைத்துள்ளது. பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் துறை சார்ந்த கோயில்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த பகுதிகளில் அதிக அளவிலான சங்க காலத்து கல்வெட்டுகள், தங்க நாணயங்கள், சிலைகள் என பல்வேறு பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடராஜன்- ஜெயலட்சுமி தம்பதிகளுக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் கழிவறை தொட்டி கட்ட குழி தோண்டும் போது தங்க புதையல் கிடைத்துள்ளது. இதனை கண்டு ஆச்சிரியம் அடைந்த தம்பதியினர், இது குறித்து பொன்னமராவதி காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து கருங்குளம் தாசில்தார் அலுவலகத்தில் தங்க நாணயங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதில் மொத்தம்  63 கிராம் எடை கொண்ட 16 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொன்னமராவதி தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் நடராஜன் தம்பதியினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தங்க நாணயங்கள்  முகலாயர் காலத்து நாணயங்களாக இருக்க வாய்ப்புள்ளதாக்க கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வாளர்கள் பரிசோதனைக்கு பிறகே நாணயத்தின் காலம் குறித்து தெளிவாக அறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Tags : Pudukkot , Home Construction, Gold Treasure, Pudukkottai,
× RELATED புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக...