×

தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: ஜவாஹிருல்லா இரங்கல்

சென்னை: தஞ்சை அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்திருக்கிறார். விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல் விழாக்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Tags : Thanjam Chariot festival ,Jawahirlah , Tanjore, Chariot Festival, Electricity, Jawaharlal Nehru
× RELATED எம்.பி ரமேஷ் பிதூரியின் பேச்சு...