நடிகர் தனுஷ்க்கு எதிரான மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி, மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கில் அவர் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை தாக்கல் செய்தார். அது போலி என்று கூறி, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி கதிரேசன், மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். ஆனால் அதில் போதுமான முகாந்திரம் இல்லையெனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

 இதை எதிர்த்து கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு செய்துள்ளார். அதில், ‘‘நடிகர் தனுஷ் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையை அறியும் விதம் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. இதன் மீதான முடிவு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை. இதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, முறையாக விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இந்த மனுவை தள்ளுபடி செய்வதற்கான பட்டியலில் இன்றைக்கு பட்டியலிடுமாறு கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: