×

சீனாவில் கொரோனா தீயாய் பரவுவதால் பீஜிங்கில் வாரத்திற்கு 3 முறை ‘கோவிட்’ டெஸ்ட்: வேறுவழியின்றி நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஷாங்காய்: சீனாவில் கொரோனா வைரஸ் தீயாய் பரவுவதால் தலைநகர் பீஜிங்கில் வாரத்திற்கு 3 முறை ‘கோவிட்’ டெஸ்ட் பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேறுவழியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதித்துக் கொள்கின்றனர். சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஷாங்காயில் மட்டும் நேற்று கொரோனாவால் ஒரே நாளில் 51 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பீஜிங்கில் வாரத்திற்கு மூன்று முறை கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. சாயாங் மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 3.5 மில்லியனுக்கும் (35 லட்சம் பேர்) அதிகமான மக்களுக்கு கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா டெஸ்ட் செய்து கொண்டனர். சாயாங் நகரில் கடந்த சில நாட்களில் மட்டும் 49 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. சாயாங்கில் பெரும்பாலான நாடுகளின் தூதரகங்களும் உள்ளதால், ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘ஜீரோ கோவிட் பாதிப்பு என்ற கொள்கையை சீனா பின்பற்றி வருகிறது. ஆனால் தொற்றுநோய் தடுப்பு நெறிமுறை அறிவியல் மற்றும் நிபுணர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போது தடுப்பு நடவடிக்ககைள் எடுக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் வசிக்கும் ஒவ்வொரு சீன மற்றும் வெளிநாட்டு குடிமகனின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு நாங்கள் சிறந்த உத்தரவாதத்தை வழங்குவோம்’ என்றார். சீனாவின் ஷாங்காய் நகரை தொடர்ந்து தலைநகர் பீஜிங்கிலும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதைத்தொடர்ந்து அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

பீஜிங் நகரில் வருகிற நாட்களில் தொற்று மேலும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஷாங்காயைப்போல பீஜிங்கிலும் ஊரடங்கு போடப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர். இதனால் நகரின் சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சீனாவில் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மற்ற நாடுகளும் உஷாராகி வருகின்றன.

Tags : Beijing ,China , ‘Govt’ Test in China, Corona, Beijing
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...