வரும் காலங்களில் உளுந்து, சிறுதானியங்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு பரிசீலனை: பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: வரும் காலங்களில் உளுந்து, சிறுதானியங்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்யும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், காலை 10 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். அச்சமயம், சிறுதானியங்களை அரசு கொள்முதல் செய்யுமா? என விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை இதுவரை நெல் கொள்முதலில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது.

விளாத்திகுளம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் பகுதிகளில் உளுந்து, சிறுதானியங்கள் அதிக அளவில் விளைகிறது. வரும் காலங்களில் உளுந்து, சிறுதானியங்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நவீன அரிசி ஆலை அமைப்பதில் டெல்டா மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: