×

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் காய்ச்சல் முகாமினை அமைச்சர் நேரில் ஆய்வு

ஈரோடு : ஈரோடு மாவட்டம்  பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் திருவாச்சி கிராமத்தில் நடந்த காய்ச்சல்  முகாமினை ஆய்வு மேற்கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு முககவசம் மற்றும்  பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் கொரோனா தொற்று அறிகுறி குறித்து  மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பு பணிகள் குறித்து, களப்பணியாளர்களிடம்  கேட்டறிந்தார். தொடர்ந்து, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூர்  1010 காலனியில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில், நோய் தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள  பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்  மற்றும் நடமாடும் ஏடிஎம் வசதி ஆகியவை குறித்து கேட்டறிந்தார். முன்னதாக அவர் நிருபர்களில் கூறுகையில்: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில்  4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளது. அதில், தற்போது 3,280  படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 720 படுக்கைகள்  காலியாக உள்ளன. ஊரக பகுதியில் மேலும் 2ஆயிரம் படுக்கைகள் உருவாக்கப்பட்டு  வருகிறது. இதனால், மாவட்டத்தில் மேற்கொண்டு தொற்று ஏற்பட்டாலும் சிகிச்சை  அளிக்கும் வகையில் முன்னேற்பாடுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில்  உள்ள 225 பஞ்சாயத்துக்களிலும் ஊரக வளர்ச்சி துறையினர், மகளிர் சுய  உதவிக்குழுவினர் 100 வீடுகளுக்கு ஒரு நபர் நியமனம் செய்து, வீடுகளில் உள்ள  நபர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் குறித்தும் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர்  கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் அதிகம் தொற்று அறிகுறி  உடையவர்களுக்கு காய்ச்சல், கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. அதிக  பாதிப்புகள் கொண்டவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்படுகிறார்கள்.  நோயாளிகள் மருத்துவமனையை நாடி வந்து சிகிச்சை பெற்றதை தவிர்த்து இப்போது  நோயாளிகளை தேடி மருத்துவ சிகிச்சை அதுவும் கிராமப்புறத்தில் செய்வது இந்த  நோய் தொற்றை வெகுவாக குறைத்துள்ளது. 3 பஞ்சாயத்துக்களில் கொரோனாவே இல்லை ஈரோடு  மாவட்டத்தில் உள்ள 225 பஞ்சாயத்துக்களில், 3 பஞ்சாயத்துக்களில் கொரோனா  தொற்றே இல்லை என மாவட்ட கலெக்டர் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கான காரணம்  கேட்டபோது, அந்த கிராமங்களில் போக்குவரத்து வசதி இல்லை என தெரியவந்தது.  இதனால், எங்ெகல்லாம் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதோ  அங்கெல்லாம் கொரோனா தொற்று வந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அரசு  விதித்த நிர்ணயத்தை கட்டணத்தை வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.ஆய்வின் போது  ஊரக வளர்ச்சி  துறையின் முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், ஊரக வளர்ச்சித்துறை ஆணையர்  பழனிச்சாமி. ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர்கள் சரவணன், மனோகரா சிங், ஈரோடு  மாவட்ட நில அளவை, நிலவரித்திட்ட இயக்குநரும், கண்காணிப்பு அலுவலருமான  செல்வராஜ், ஈரோடு கலெக்டர் கதிரவன், கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர்  நிர்மல்ராஜ், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, ராஜ்யசபா எம்பி செல்வராஜ், எம்எல்ஏக்கள்., திருமகன் ஈவெரா,ஏ.ஜி.வெங்கடாச்சலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு,  உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) உமாசங்கர், இணை இயக்குநர்(மருத்துவப் பணிகள்)  கோமதி, துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், மாநகராட்சி கமிஷனர்  இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்….

The post பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் காய்ச்சல் முகாமினை அமைச்சர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Perundurai Panchayat Union ,Erode ,Erode District Perundurai Panchayat Union ,Tiruvachi ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா