லட்சுமிக்கு கர்நாடக அரசு விருது

சென்னை: பழம்பெரும் நடிகை லட்சுமி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கர்நாடக அரசு பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாார் பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி உள்ளது. பெங்களூருவில் நடந்த 2017ம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை இதனை வழங்கினார். விருதை பெற்றுக் கொண்டு பேசிய லட்சுமி, ‘டாக்டர் ராஜ்குமார் பெயரில் வழங்கப்பட்டுள்ள இந்த விருதை பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன்’ என்றார்.

Related Stories: