×

2 லாரிகளுக்கு நடுவில் கார் சிக்கி விபத்து நிதிநிறுவன அதிபர் உள்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி: பெரம்பலூர் அருகே பரிதாபம்

பெரம்பலூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முனியப்பன் (45). நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கலைவாணி (40). தம்பதிக்கு வர்ஷிணி(17), ஹரினி (13) என்ற 2 மகள்களும், கார்முகிலன்(6) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சீர்காழி செல்வதற்காக ேநற்றுமுன்தினம் நள்ளிரவு முனியப்பன் தனது காரில் மனைவி கலைவாணி, மகள் ஹரினி, மகன் கார்முகிலன், தாய் பழனியம்மாள் (68) ஆகியோருடன் சென்றார். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை டோல்பூத் அருகே நேற்று அதிகாலை 4.15 மணியளவில் கார் சென்றது. அப்போது முன்னால் சென்ற லாரியின் டிரைவர், திடீர் என பிரேக் போட்டதால் அதன்மீது கார் மோதியது. அதே நேரத்தில் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி, காரின் பின்பக்கம் பயங்கராக மோதியது.

இதில் முன்னால் சென்ற லாரிக்குள் கார் புகுந்தது. இதேபோல் அடுத்தடுத்து என மொத்தம் 5 வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில் 2 லாரிகளுக்கு நடுவில் கார் சிக்கி முற்றிலும் நொறுங்கி சேதமானது. காரில் இருந்த முனியப்பன், கலைவாணி, ஹரினி, பழனியம்மாள் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் கார்முகிலன் காயங்களுடன் உயிர் தப்பினார். மாஜி ராணுவவீரர் ஓட்டிய  கார் மோதி 3 பேர் பலி: விருதுநகர் மாவட்டம், பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குருசாமி(55). இவர் நேற்று கோவில்பட்டிக்கு சென்றபோது, மீனாட்சிபுரம் சந்திப்பில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுங்கச்சாவடி பணியாளர்கள் செல்வபாண்டி(33),  கருப்பசாமி(32),  ராம்குமார்(32) ஆகியோர் கார் மோதி உயிரிழந்தனர். குருசாமி மது போதையில் காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

Tags : Peradeniya , 4 killed in car accident between 2 lorries
× RELATED தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில்...