×

டெல்டா மாவட்ட கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் ஆய்வு

திருச்சி :திருச்சி மாவட்டம் கல்லணையில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். நாளை மேட்டூர் அணை நீர் பாசனத்திற்காக திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் சக்கரபாணி எம்.பி.பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். காா் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்த மு.க.ஸ்டாலின் அங்கு கல்லணை கால்வாய் நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டுகிறார். இதை தொடர்ந்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். 

The post டெல்டா மாவட்ட கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister of ,Delta District ,Cemetery ,G.K. Stalin ,Mattur Dam ,Trich ,Chief Minister of State ,Tiruchi ,District Cemetery ,Matur Dam Water ,Delta District Cemetery ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு...