விழுப்புரம் திமுக எம்எல்ஏ கார் விபத்தில் உயிர் தப்பினார்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திமுக எம்எல்ஏ லட்சுமணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். விழுப்புரம் அருகே சாலை அகரம் அரசு பள்ளியில், மேலாண்மை குழு கூட்டம் நேற்று  நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக எம்எல்ஏ  லட்சுமணன் நேற்று காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அவருடன் கவுன்சிலர்கள் புருஷோத்தமன், மணவாளன் உள்ளிட்டவர்களும் சென்றனர். சாலை அகரத்திற்கு அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், எம்எல்ஏவின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் லட்சுமணன் எம்எல்ஏ காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இருப்பினும் காரின் பின் பகுதி சேதமடைந்தது.

தகவலறிந்த வளவனூர் போலீசார் வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே திமுக எம்எல்ஏ கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: