டி டி வி தினகரனிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை விசாரணை

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி தினகரனிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை விசரானை நடத்தியுள்ளது . நீதிமன்றங்களில் டி.டி.வி தினகரன் சமர்ப்பித்த ஆவணங்கள், வங்கி கணக்குள் விவரத்தை அதிகாரிகள் கேட்டு பெற்றுள்ளனர். டி.டி.வி தினகரன் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். டிடிவி தினகரனின் வங்கி கணக்கில் இருந்து அதிக பணம் எடுத்திருந்தால் ஏன் எடுக்கப்பட்டது என்ற கோணத்திலும் ஹவாலா பண பரிவர்த்தனை செய்துள்ளாரா என்றும் டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினார்கள்.

Related Stories: