×

‘உபா’ பட்டியலில் 7 தீவிரவாதிகள் சேர்ப்பு.! உள்துறை அமைச்சகம் அதிரடி முடிவு: பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடி

புதுடெல்லி: ‘உபா’ சட்டத்தின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்ந்த ஏழு தீவிரவாதிகளின் பெயரை உள்துறை அமைச்சகம் சேர்த்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த முடிவால் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பாகிஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜத் குல், ஆஷிக் அகமது நெங்ரூ, முஷ்டாக் அகமது சர்கார், அர்ஜுமந்த் குல்சார் ஜான், அலி காஷிப் ஜான், மொகிதீன் அவுரங்கசீப் ஆலம்கிர், ஹபீஸ் தல்ஹா சயீத் ஆகிய ஏழு தீவிரவாதிகள் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ-உபா) கீழ் பட்டியலிட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவர்கள் உபா பட்டியலில் சேர்க்கப்பட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நாடுகளிடம் இந்தியாவில் தீவிரவாதிகளின் நடவடிக்கை குறித்த பிரச்னையை எழுப்ப உதவும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தீவிரவாதிகளுக்கு நிதிஉதவி செய்ததற்காக, ‘கிரே’ பட்டியலில் பாகிஸ்தான் ெதாடர்ந்து நீடிக்கிறது. சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவானது  சமீபத்தில் பாகிஸ்தானுக்கு கொடுத்த அறிவிப்பில், தீவிரவாதிகளுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் மாதம் பாரிஸில் நடைபெறவுள்ள எப்ஏடிஎப் மாநாட்டில், மேற்கூறிய தீவிரவாதிகள் குறித்த ஆவணத்தை இந்தியா வழங்க உள்ளதால், பாகிஸ்தான் மேலும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Uba ,Ministry ,Pakistan , 7 militants added to 'Uba' list! Home Ministry Action Decision: Further crisis for Pakistan
× RELATED டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!!