×

பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்ல உள்ள நிலையில், அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்..9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. 2 வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர் : ஜம்முவில்  சிஐஎஸ்எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்முவில் சதா முகாம் அருகே இன்று காலை 15 சிஐஎஸ்எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது திடீரென்று தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதே போன்று வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் உள்ள மால்வா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது..தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது  தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி யூசுப் கான்ட்ரூவும் கொல்லப்பட்டான். மேலும் , ஒரு அதிகாரி மற்றும் ஒரு போலீஸ்காரர் உட்பட நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.

மேலும் சுஞ்வான் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு வீரர் வீரமரணம் அடைந்த நிலையில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர். இதனிடையே தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்துக்கு உட்பட்ட பாலி கிராமத்தில் சிறப்பு விழா நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார்.ஆனால் அங்கு தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.


Tags : Modi ,Kashmir , Prime Minister Modi, Kashmir, extremists
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...