வாகன பெருக்கம் அதிகமாக உள்ளதால் திருப்போரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம்: எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: வாகன பெருக்கம் அதிகமாக உள்ளதால் திருப்போரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி வலியுறுத்தி பேசினார். சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்பாது, திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) பேசுகையில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து  அலுவலகம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன பெருக்கம் மிகவும் அதிமாக உள்ளது. இந்த சூழலில் திருப்போரூரில் ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது குறைந்தபட்சம் ஒரு பிரிவு அலுவலகம் ஏற்படுத்த அமைச்சர் முன்வருவாரா என்றார்.

அதற்கு பதில் அளித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ஏற்கனவே நான் பதிலில் குறிப்பிட்டதை போல, 2500 போக்குவரத்து வாகனங்களும், 7500 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் அந்த பகுதியில் இருந்தால், அதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, தேவை ஏற்படின் அந்த அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: