×

ஆன்மிக பெருமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய முதல்வர் வலியுறுத்தல்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பேச்சு

சென்னை; சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அரசு கொறடா கோவி செழியன், கும்பகோணம் செல்லும் சாலை விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ஒருவழிச்சாலைகளை இருவழிச்சாலைகளாக்க வேண்டும். இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக்க முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்திலிருந்து கும்பகோணத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற போது முதலமைச்சரிடமிருந்து அழைப்பு வந்தது.

திருவண்ணாமலையில் 20 லட்சம் ஆன்மிக பெருமக்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார். உடனடியாக ஆய்வை ரத்து செய்துவிட்டு திருவண்ணாமலை சென்றேன். எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆன்மிக பெருமக்கள் சிறப்பாக சித்ரா பவுர்ணமியை கொண்டாடினார்கள். கூட்டத்தொடர் முடிந்தவுடன் கும்பகோணத்திற்கு ஆய்வுக்கு செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,Public Works Minister ,E.V. வேலு , Chief Minister urges to review security arrangements for spiritual dignitaries: Public Works Minister
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...