×

வேலூரில் கோடை வெயில் கொளுத்துவதால் கள் குடிக்க ஆந்திராவுக்கு செல்லும் குடிமகன்கள்: போதை மருந்து கலப்படத்தால் உடல்நலம் பாதிக்கும் அபாயம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் கள் குடிக்க ஆந்திராவிற்கு குடிமகன்கள் செல்கின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு போதை பொருள் கலப்படம் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் தினமும் வெயில் பதிவாகிறது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் குடிமகன்கள் வெயிலை தவிர்க்க கள் குடிக்கின்றனர். இதற்காக அவர்கள் ஆந்திராவுக்கு அதிகளவில் செல்கின்றனர். பலர் பைக்குகளிலேயே சென்று கள் குடித்துவிட்டு வருகின்றனர்.இதில் காட்பாடி அருகே உள்ள உள்ளிபுதூர், பொம்மசமுத்திரம், பரதராமி அருகே உள்ள கொட்டாளம், பாளையம், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் கள் விற்பனை படுஜோராக நடக்கிறது. அதிகரித்து வரும் கோடை ெவயிலை சமாளிக்க கள் உடலுக்கு நன்மை எனக்கூறிக்ெகாண்டு தற்போது அதிகப்படியானோர் கள் குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆனால் வாடிக்ைகயாளர்களை கவர இயற்கை பானமான கள்ளில் போதைப்பொருள் கலப்படம் செய்யப்படுகிறது. இதனால், டாஸ்மாக் மதுபானங்களைவிட அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுகிறது. கள் குடிப்பதால் நல்ல தூக்கம் வரும் என்ற நிலை மாறி குறைந்த செலவில் போதை அதிகமாக கிடைக்கும் என்றாகிவிட்டது. ஒரு மரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளில் ஒரு லிட்டர் வரை தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும்.

ஆனால், தற்போது விற்பனையாகும் கள்ளில் ஒரு குடம் தண்ணீருடன் போதைப்பொருள் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தயாராகும் கள் ஒரு மக்கு ₹30க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுபோன்ற கள் கடைகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஆந்திராவில் எந்தவித குழுக்களும் கிடையாது. இதனால், ஆங்காங்கே சாலையோரங்களில் நாளுக்கு நாள் கள்ளு கடைகள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கடையிலும் குறைந்தபட்சம் போலியாக தயாரிக்கப்படும் 250 லிட்டர் கள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறான கள்ளை குடிப்பதால் கண் பார்வை குறைபாடு ஏற்படும். நுரையீரல், இருதயம், கிட்னி என உடல் உறுப்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

தண்ணீரில் போதைப்பொருள் கலந்து விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதில் கிடைக்கும் போதைக்கு பலர் அடிமையாகி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் ஆந்திராவுக்கு சென்று கள் குடிக்கின்றனர். வாடிக்கையாளர்களை கவர கள் விற்பனையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு போதைப்பொருள் கலப்படம் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான். எனவே உடல் நலத்தை கருத்தில் கொண்டு போலியான கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதிகாரிகளும் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Andhra ,Velur , Citizens going to Andhra Pradesh to drink s due to summer sun in Vellore: Risk of health effects due to drug adulteration
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்