×

மேச்சேரியில் அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரியில் அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மேச்சேரியில் அனுமதியின்றி 15க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருவதால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சாயப்பட்டறைகளுக்கு குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் இணைப்புகளிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் மாசடைந்து வருகின்றன. இதுகுறித்து பலமுறை மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளுக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

சாயப்பட்டறைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் மேச்சேரி ஏரியில் நேரடியாக கலக்கிறது. இதனால் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.    


Tags : Mechery , Public demand to take action against unauthorized dye mills in Machcheri and protect water bodies
× RELATED கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மூவர் கைது