திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை திட்டி தாக்க முயன்ற மாணவர்கள்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் அரசு பள்ளியில் ஆசிரியரை திட்டி மாணவர்கள் தாக்க முயன்றனர். தாவரவியல் ஆசிரியர் சஞ்சய் என்பவரை மாணவர்கள் ஆபாசமாக திட்டி தாக்க முயற்சித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியரை தாக்க முயன்ற வீடியோ வெளியான நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் வேலன் விசாரணை நடத்தி வருகிறார். தாவரவியல் ரெக்கார்ட் நோட் சமர்பிக்காத மாணவனை ஆசிரியர் தட்டிக்கேட்டதால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Related Stories: