சர்வதேச செஸ் போட்டி பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு டிடிவி பாராட்டு

சென்னை, ஏப்.21: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:

ஸ்பெயின் நாட்டில் நடந்த லா ரோடா சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இதே தொடரில் மூன்றாம் இடம் பிடித்துள்ள இளம் செஸ் வீரரான பிரக்யானந்தாவுக்கும் வாழ்த்துகள். சதுரங்கத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் இவர்கள் இருவரும் மேலும் பல சாதனைகள் புரிந்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

Related Stories: