இளையராஜா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து: மாநில பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: இளையராஜா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அண்ணாமலை கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள்-புதிய இந்தியா 2022’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நூலினை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட, நடிகர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் ஜி.ராம்குமார், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.செல்வராஜ் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, அண்ணாமலை அளித்த பேட்டி:

கவர்னர் சென்ற வாகனம், பாதுகாப்பு வாகனம் மீது கொடிகள் வீசப்பட்டதா, இல்லையா என்பதை டிவிட்டரில் நான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்தால் தெரியும். கவர்னரின் பாதுகாப்பு குறித்து, காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினின் கருத்து  ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை. போராட்டத்தில் தேசத்திற்கு எதிராகவும் முழக்கம் எழுப்பியுள்ளனர்.

தேசத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்கள், பாதுகாப்பு குறைபாடு விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடிகர் பாக்யராஜ், பாஜவுக்கு ஆதரவு என்பதைவிட, பிரதமருக்கு ஆதரவு என பார்க்க வேண்டும். இளையராஜா பேசியது, அவரது தனிப்பட்ட கருத்து. அவரது கருத்தை எதிர்த்து, அம்பேத்கரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் கிளம்பி வந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: