×

மேல்மருவத்தூர், படாளத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

மதுராந்தகம்: மேல்மருவத்தூர், படாளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது கஞ்சா விற்ற 5 பேரை கைது செய்தனர். மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அருகே பொறையூர் பஸ் நிலைய பகுதியில் மேல்மருவத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது பதற்றத்துடன் காணப்பட்டனர். விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சேசராம் (35), வந்தவாசி அருகே உள்ள மருதாடு கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் (32) என்று தெரிந்தது.

இவர்கள் அங்குள்ள புதரில் பதுக்கிவைத்திருந்த 130 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அவர்களை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதுபோல் மதுராந்தகம் அருகே  படாளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் படாளம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மாமண்டூர் பேருந்து நிலையம் அருகே கஞ்சா  விற்பனையில் ஈடுபட்ட கபில் (எ)கண்ணதாசன் (29) கைது செய்து 1, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மாமண்டூர் வடபாதி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுனில்குமார் (22) கைது செய்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மாமண்டூர் ஆற்றங்கரை சுடுகாடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிட்டிசன் (20) கைது செய்து 1,150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Melmaruvathur , 5 arrested for selling cannabis in Melmaruvathur
× RELATED சேதமான மேம்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்