கந்தர்வகோட்டையில் கோளரங்கம்?: அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி, நேரத்தின்போது கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை (சிபிஎம்) பேசுகையில், ‘’கந்தவர்கோட்டை தொகுதியில் கோளரங்கம் அமைக்கப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்த  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, வேலூர் மற்றும் கோவையில் 4 கோளரங்கங்கள் உள்ளன.

புதிதாக ஒரு கோளரங்கம் உருவாக்க வேண்டும் என்றால் 5 ஏக்கர் நிலமும் ரூ.15 கோடி நிதியும் தேவை. திருச்சியில் அண்ணா அறிவியல் மையம் உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் புதிதாக கோளரங்கம் அமைக்க வாய்ப்பு இல்லை. வரும்காலங்களில் நிதிநிலைக்கேற்ப புதிய கோளரங்கங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: