×

ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டில் மாணவர்கள் பயணம்; வேலூரில் பேருந்தை பறிமுதல் செய்து குடியாத்தம் வட்டார போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

வேலூர்: வேலூர் அருகே கல்லூரி மாணவர்கள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த பேருந்தை குடியாத்தம் காவல் துறையில் பறிமுதல் செய்து வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஆற்காடு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படடியும், பேருந்தின் பின்புறம் ஆபத்தான முறையில் பயணம் செய்ததை ஓட்டுநரும், நடத்துனரும் கண்டிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்தை அதிவேகமாக இயக்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். படிக்கட்டில் பயணம் செய்த 111 பள்ளி மாணவர்களும் 43 கல்லூரி மாணவர்களையும் பேருந்துகளிலிருந்து  கீழே இறக்கி விட்டு அந்த மாணவர்களின் பெயர் மற்றும் முழு முகவரி, பள்ளி மற்றும் கல்லூரியின் அடையாள அட்டை மூலம் சரிபார்த்து பெற்று, அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், சம்மந்தப்பட்ட பள்ளி கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போன்று படிகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவர்கள் மீது தகுந்த வழக்குகள் பதியப்படும் என்று போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags : Velore , Dangerous, bus, travel, Vellore, seizure
× RELATED வேலூரில் உள்ள வங்கி, நகை மற்றும் அடகு...