×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துப்போயினர். சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. நடப்பாண்டில் சென்னை மீனம்பாக்கத்தில் முதன்முறையாக அதிகபட்ச வெயில் பதிவானது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, மதுரை 105 டிகிரி ஃபாரன்ஹீட், தருமபுரி 104 டிகிரி ஃபாரன்ஹீட், கோவை 104 டிகிரி ஃபாரன்ஹீட், வெயில் திருச்சி 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில், பாளையங்கோட்டை 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,Chennai ,Paramathi ,India ,
× RELATED பதவி ஏற்ற முதல் எண்ணற்ற சிறப்பு...