×

ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தினால் தொழில்துறை வீழ்ச்சியடையும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டால், அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விளைவுகளை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களின் துயரங்கள் உச்சம் தொடும். இப்போது ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டால் கைத்தறி மற்றும் பட்டுத் துணி தொழில் பாதிக்கப்படும். இதேபோல், மேலும் பல தொழில்களும் ஜி.எஸ்.டி வரி உயர்வால் வீழ்ச்சியடையும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை உயர்த்தும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மாநில அரசுகளின் வருவாய் இழப்பை ஒன்றிய அரசே இன்னும் இரு ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும். இந்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தீவிரமாக வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : G.S.T. Industry ,Ramadas ,U.S. government , G.S.T. Industry will fall if taxes are raised: Ramadas warns U.S. government
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண்...