×

ரூ 141 கோடியில் விமான சாதனங்கள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்

சென்னை: டிட்கோ, ஜிஇ ஏவியேஷன் கூட்டுடன் தமிழ்நாட்டில் ரூ 141.26 கோடியில் விமான சாதனங்கள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது , விமான என்ஜின்கள், கியார்கள் உள்பட பல்வேறு உதிரிபாகங்கள் தொழில்நுட்ப மேம்பாடு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். விமானத்துறை  சார்ந்த உயர் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தில் 5 ஆண்டுகளில் ரூ 141.26 கோடி முதலீடு செய்ய நிறுவனங்கள் முடிவு.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் 2021-ல் ஜிஇ ஏவியேஷன் செய்த ஒப்பந்தப்படி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். டிட்கோ, ஜிஇ ஏவியேஷன் ஆராய்ச்சி மையம் அமைப்பதால் விமான உதிரிப்பாக தயாரிப்புத் தொழில் தமிழகம் வளர்ச்சி பெறும் என்றும் .ராணுவ தளவாடங்கள், விமான கருவிகள் தயாரிப்பு தொழில் சார்ந்த முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வர ஆராய்ச்சி மையம் உதவும். முப்பரிமான வடிவமைப்புத் தொழிநுட்பம் வாயிலாக பல்வேறு இயந்திரங்களை உருவாக்க ஆராய்ச்சி மையம் உதவிகரமாக இருக்கும்.


Tags : Airline Devices Research Centre , aviation equipment research center
× RELATED கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து...