×

அரசுப்பணியில் ஓபிசி இடஒதுக்கீடு ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசு பணி பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ள ஒன்றிய அரசு, ஒவ்வொரு துறையின் உயர்பதவிகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதற்கான புள்ளிவிவரங்களைத் திரட்டி தரும்படி அனைத்துத் துறைகளின் தலைவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகளை ஒன்றிய அரசு புறம் தள்ள முடியாது. ஒன்றிய அரசின் 75 துறைகளில் மொத்தமுள்ள 27,55,430 பணியாளர்களில் பட்டியலினத்தவர் 4,79,301 (17.30%), பழங்குடியினர் 2,14,738 (7.7%), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 4,57,148 (16.50%) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசுப் பணிகளில் 27% ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அனைத்து நிலை பணிகளிலும் ஓபிசி பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டதற்கும் குறைவாக 16.50% என்ற அளவில் தான் இருக்கிறது. பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இதை விட வலிமையான காரணம் தேவையில்லை. எனவே மத்திய அரசின் உயர்பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து ஓபிசியினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

Tags : Ramadas ,OBC ,Left Union government , Ramadan Request for OBC Reservation Union Government in Public Service
× RELATED தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை: ராமதாஸ் பேட்டி