மதிமுக மாவட்ட செயலாளர் கழககுமாரின் தந்தை கண்ணன் படத்திறப்பு

துரைப்பாக்கம்: மதிமுக தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கழககுமாரின் தந்தை ஏ.வி.கண்ணன் நாயக்கர் பட திறப்பு விழா, கொட்டிவாக்கம் காவேரி நகர், குப்பம் சாலையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு ஏ.வி.கண்ணன் நாயக்கர் படத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி மலர் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், அசன் மவுலானா, எஸ்.எஸ்.பாலாஜி, தாம்பரம் துணை மேயர் காமராஜ், திமுக  வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம், பாலவாக்கம் சோமு, திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு, மதிமுக மாவட்ட செயலாளர்கள்  சு.ஜீவன், சைதை சுப்பிரமணி, சு.செல்லப்பாண்டியன், குரோம்பேட்டை நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: