×

வீடியோ எடுத்து மிரட்டி ரூ.9 லட்சம் நகை, பணம் பறிப்பு சென்னையில் 5 ஆண்டாக பள்ளி மாணவி பலாத்காரம்: இசைக்கலைஞர் போக்சோவில் கைது

சென்னை:சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சினிமா துறையில் பணியாற்றும் குமார் (43), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த வாரம் அசோக் நகர் காவல் நிலையத்தில் டிரம்ஸ் வாசிக்கும் வாலிபர் ஒருவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் தனது மகளை காதலிப்பதாக கூறி மிரட்டி பணம், ஒரு சவரன் ெசயினை பறித்து ஏமாற்றியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.

புகாரின்படி, அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்த டிரம்ஸ் வாசிக்கும் ஞானபிரகாசம் (20) என்பவருக்கும், பாட்டி வீட்டிற்கு சென்றபோது பள்ளி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறியுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஞானபிரகாசம், பள்ளி மாணவியிடம் சிறுக சிறுக ரூ.9 லட்சம் பணம், ஒரு சவரன் செயினை பறித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, அசோக் நகர் போலீசார் ஞானபிரகாசத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

டிரம்ஸ் இசை கலைஞர் ஞானபிரகாசத்திடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:
கோடம்பாக்கம் காமராஜ் காலனியில் பள்ளி மாணவியின் பாட்டி வீடு உள்ளது. மாணவி பிரபல தனியார் பள்ளியில் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறார். வசதியான குடும்பத்தை சேர்ந்த மாணவி. இவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு 8ம் வகுப்பு படிக்கும் போது, தனது பாட்டி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, ஞானபிரகாசம் அவருக்கு பழக்கமானார். ஞானபிரகாசம் பிளஸ் 2 வரை படித்துள்ளார். தற்போது கோடம்பாக்கம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஞானபிரகாசம் பள்ளி மாணவியை பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர் கோடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். மாணவியின் பெற்றோர் வெளியே சென்றதும், ஞானபிரகாசம் மாணவியின் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் பேசி வந்துள்ளார். அப்படி பேசும் போது, மாணவியிடம் திருமணம் ெசய்துகொள்வதாக கூறி அவரது வீட்டிலேயே கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். பிறகு அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி ஜாலியாக வெளியே போகலாம் என்று கூறி சிறுக சிறுக அவரது வீட்டிற்கு தெரியாமல் பணம் பறித்து வந்துள்ளார். அந்த வகையில் ரூ.2 லட்சம் பணம், ஒரு சவரன் செயினை மாணவி தனது காதலன் ஞானபிரகாசத்திடம் கொடுத்துள்ளார். வசதியான சிறுமி என்பதால் வீட்டில் இருந்து எடுத்த பணம் குறித்து அவரது பெற்றோர் கண்டுகொள்ளவில்லை. அதன்படி கடந்த 5 ஆண்டுகளாக மாணவியை ஞானபிரகாசம் சீரழித்துள்ளார்.

இந்நிலையில், மாணவியுடன் தங்கும் விடுதிகளில் ஒன்றாக இருந்ததை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் ஞானபிரகாசம். அந்த வீடியோவை கடந்த மாதம் மாணவியிடம் காட்டி, ‘‘எனக்கு பணம் தேவைப்படுகிறது. வீட்டில் இருந்து பெரிய அளவில் பணத்தை எடுத்து வந்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உனது பள்ளி தோழிகள், உனது பெற்றோருக்கு இந்த வீடியோவை அனுப்பி விடுவேன்’’ என்று மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத மாணவி, என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தானே என்னுடன் பழகினாய். நீயே இப்படி வீடியோ எடுத்து மிரட்டலாமா என்று கேட்டு அழுதுள்ளார். அதற்கு ஞானபிரகாசம், நான் கார் வாங்க வேண்டும். அதற்கு பணம் தேவைப்படுகிறது. பணத்தை கொடுத்தால் நான் வீடியோவை உன் முன்பே அழித்துவிடுகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

பிறகு வேறு வழியின்றி மாணவி வீட்டில் அவரது தந்தை, நண்பர் ஒருவருக்கு கொடுக்க பீரோவில் வைத்திருந்த ரூ.7 லட்சம் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து காதலன் ஞானபிரகாசத்திடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட ஞானபிரகாசம் உடனே கார் ஒன்று வாங்கியுள்ளர். அந்த காரில் வீட்டிற்கு தெரியாமல் பள்ளி மாணவியை அழைத்துக்கொண்டு சென்னை உள்பட பல இடங்களில் சுற்றி வந்துள்ளார். ஆக மொத்தம், மாணவியை கடந்த 5 ஆண்டுகளில் மிரட்டி மொத்தம் ரூ.9 லட்சம் பணம், ஒரு சவரன் செயின் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.  

மேலும், ஞானபிரகாசம் பள்ளி மாணவியை கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதால் இந்த வழக்கு அசோக் நகர் குற்றப்பிரிவில் இருந்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஞானபிரகாசம் அளித்த வாக்குமூலத்தின்படி மிரட்டி பணம் பறித்தல், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

பள்ளி மாணவியின் தந்தை பீரோவில்  வைத்திருந்த பணத்தை காணவில்லையே என்று அவரது மனைவியிடம் தகராறு செய்து  வந்துள்ளார். வீட்டிற்கு வெளியாட்கள் யாரும் வந்து செல்லாத நிலையில் ரூ.7  லட்சம் பணம் மட்டும் எப்படி மாயமாகும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.  அப்போது, மகள் ஒருவித பதற்றத்துடனும், அடிக்கடி செல்போனில் பேசிய படியும்  இருந்ததை அவரது தந்தை கவனித்துள்ளார். உடனே மகளை அழைத்து பணம் குறித்து  உனக்கு ஏதேனும் தெரியுமா என்று கேட்டுள்ளார். முதலில் எனக்கு தெரியாது என்று கூறி அழுதுள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர், ஏதோ தவறு நடந்து இருப்பதை உணர்ந்து அமைதியாக விவரத்தை கேட்டுள்ளனர்.

அதற்கு மாணவி கடந்த 5  ஆண்டுகளாக தனக்கு நடந்த கொடுமைகள் குறித்தும், ஞானபிரகாசம் தவறாக நடந்து  கொண்டதும், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது பற்றியும்  தெரிவித்துள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் செய்வது தெரியாமல் தவிர்த்துள்ளனர். புகார் கொடுத்தால் மகளின் வாழ்க்கை பாழாகிவிடுமே என்றும் அச்சமடைந்துள்ளனர். ஆனால் மகளுடன் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டால் மகளின் வாழ்க்கை  பாதித்துவிடும், உறவினர்கள் மத்தியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிடும் என கருதினர். பிறகு வேறு வழியின்றி ஞானபிரகாசம் மீது மாணவியின் தந்தை  புகார் அளித்துள்ளார்.

Tags : Mirati ,Chennai ,Boxo , Video, chennai, schoolgirl, rape, musician, pox,
× RELATED போக்சோ வழக்கில்...