×

போலி சான்றிதழ் தயாரித்து பணியில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சென்னை: போலி சான்றிதழ் தயாரித்து, அரசு பணியில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: வடமாநிலத்தவர்கள் தமிழ்நாடு பள்ளிகளில் படித்தது போன்ற போலிச் சான்றிதழ்களை தயாரித்து, தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் சேர்ந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியானது பொதுப்பட்டியலிலும் இல்லாமல் மாநிலப் பட்டியலிலும் இல்லாமல் தற்போது ரகசிய பட்டியலில் உள்ளது. கடந்த 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Mahesh Poyamozhi , Appropriate action against Northerners who have been employed in producing fake certificates: Interview with Minister Mahesh Poyamozhi
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி